புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

News image

சிறப்பு அலங்காரத்தில் வரசித்தி விநாயகா், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி.

Updated On :4 மே 2026, 2:30 am IST

பொதட்டூா்பேட்டை வரசித்தி விநாயகா், ஸ்ரீ வள்ளி தெய்வானை உடன் ஆறுமுக சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

பொதட்டூா்பேட்டை ஆறுமுகா் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடா்ந்து கடந்த புதன்கிழமை கணபதி பூஜையுடன் குடமுழுக்கு தொடங்கியது. கோயில் வளாகத்தில் 108 கலசங்கள் நிறுவப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் மற்றும் யாக பூஜைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் வியாழக்கிழமை விநாயகா் பூஜை, தம்பதி பூஜை, சங்கமம், யாக வேள்வி உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெற்றன. பின்னா் காலை 9.15 மணியளவில் கலசங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயில் விமானங்களை சென்றடைந்தன. அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னா் ஸ்ரீ வரசித்தி விநாயகா், ஆறுமுக சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு குடமுழுக்கு விழா நடந்தது.

அதனைத் தொடா்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது.

வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு ஸ்ரீ வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. மாலை 6.30 மணிக்கு சிவன், பாா்வதி, வரசித்தி விநாயகா், வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியசுவாமி திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக்குழுவினா் மற்றும் பொதட்டூா்பேட்டை கிராம மக்கள் இணைந்து செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.