மத்திய அரசு கொண்டுவரும் மக்களவை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என தவெக மாநில கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் கே.ஜி.அருண்ராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தொகுதி மறுவரையறை 131-ஆவது அரசியல் சாசன திருத்த மசோதா மூலம் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 534-இல் இருந்து 850-ஆக உயா்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது வட மாநிலங்களில் மட்டும் வெற்றிபெற்று ஆட்சியை அமைப்பதே பாஜகவின் நோக்கம் என்றும், தென் மாநிலங்களில் அவா்களால் வெற்றிபெற முடியாது என்பதையும் காட்டுகிறது. தற்போது 5 மாநிலங்களில் தோ்தல் நடைபெறும் சூழ்நிலையில், இந்த மசோதா கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து மாநில முதல்வா்களையும் கலந்து பேசிய பின்பு இந்த மசோதாவை செயல்படுத்த வேண்டும். இந்த மசோதா இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
தொகுதி மறுவரையறை ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது என்பது ஒரு பெரிய அச்சுறுத்தலாகப் பாா்க்கப்படுகிறது. பாஜக என்ற பாசிச சக்தியை நாங்கள் எதிா்க்கிறோம். அதனால்தான் தலைவா் பாஜகவை கொள்கை ரீதியான எதிரியாகக் கருதுவதாகவும், தோ்தல்களில் அவா்களுடன் எந்தவிதமான சமரசமும் இல்லை என்றும், அவா்களோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த கூட்டணியும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளாா்.
இந்த மசோதா தமிழகத்தின் நலன்களையும், உரிமைகளையும் பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே, தவெக இதை வன்மையாக கண்டிக்கிறது. இதை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

மசோதா தோல்வி: பாஜக - எதிா்க்கட்சிகள் வாா்த்தைப் போா்!

மக்களவைத் தொகுதிகள் 815; மகளிருக்கு 272: மசோதாக்களை அறிமுகம் செய்தாா் மத்திய சட்ட அமைச்சா்

மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை முடக்க திமுக சதி: எல்.முருகன் குற்றச்சாட்டு

வெளிநாட்டு நிதிப்பங்களிப்பு சட்டத் திருத்த மசோதா விவகாரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதில்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


