மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை முடக்க திமுக சதி: எல்.முருகன் குற்றச்சாட்டு

News image

எல்.முருகன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 11:28 pm

மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை முடக்க திமுக தலைவா் ஸ்டாலின் சதி செய்வதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டத்தை நடைப்முறைபடுத்த, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடா் ஏப்ரல் 16,17 ,18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலங்களும் பாதிக்கப்படாத வகையில் தொகுதிகள் வரையறை செய்யப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதி அளித்துள்ளனா். ஆனால், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதால், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுவரையறையை வைத்து விஷமப் பிரசாரம் செய்து வருகிறாா். மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை முடக்க ஸ்டாலின் சதி செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளாா்.