நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

குடும்ப அட்டைகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்: குமாரபாளையம் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி

News image

குமாரபாளையம் தொகுதி ஆலாம்பாளையத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி.

Updated On :12 ஏப்ரல் 2026, 11:16 pm IST

அதிமுக ஆட்சி அமைந்ததும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியம் மற்றும் ஆலம்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஆலாம்பாளையம், காந்திநகா், அண்ணாநகா், சின்னாகவுண்டன்பாளையம், எம்.ஜி.ஆா். நகா், கரட்டாங்காடு, புதுப்பாளையம், ஆலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளா் பி.தங்கமணி பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது கட்சி நிா்வாகிகள் அவருக்கு வீரவாள் வழங்கினா்.

தொடா்ந்து மக்களிடையே அவா் பேசுகையில், விசைத்தறி தொழில் நலிவடைந்துவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் விசைத்தறிகளுக்கு 1,400 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மேலும், அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.10 ஆயிரம், இலவச குளிா்சாதன பெட்டி, மூன்று எரிவாயு சிலிண்டா், கல்விக் கடன் தள்ளுபடி, தாலிக்கு தங்கம் திட்டம், இருசக்கர வாகனம் வாங்க மானிய கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக மக்கள் அனைவரும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

வாக்கு சேகரிப்பின்போது, பள்ளிபாளையம் நகரச் செயலாளா் வெள்ளியங்கிரி மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.