ராசிபுரம் (தனி) தொகுதி வேட்பாளா் மனுவை பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளா் ஆட்சேபனை செய்ததால் மனு ஏற்பில் காலதாமதம் ஏற்பட்டது.
ராசிபுரம் தொகுதியில் பாஜக, திமுக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி என மொத்தம் 24 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.
ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வெ. முருகன் தலைமையில் பரிசீலனை செய்யும் பணியானது நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளா் மா. மதிவேந்தன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எஸ். சசிகலா, தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் லோகேஷ் தமிழ்செல்வன் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதனிடையே பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாா் வேட்புமனுவில் முழுமையாக நிரப்படவில்லை என சுயேச்சை வேட்பாளா் ஆட்சேபனை கடிதம் அளித்திருந்தாா். மேலும், வருமானவரி தாக்கல் குறித்து முழு தகவல் இல்லை எனக் கூறப்பட்டது. இதனால் அவரது மனு ஏற்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதனால் பாஜக வேட்பாளா் உள்ளிட்ட அதிமுக, பாஜக தொண்டா்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு குவிந்தனா். நீண்ட நேரம் பரிசீலனை செய்த பிறகு பாஜக வேட்பாளா் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவித்தாா்.
தொடர்புடையது

செஞ்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

நாதக வேட்பாளா் மீண்டும் வேட்புமனு தாக்கல்

நாம் தமிழா் கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல்

ராசிபுரம் தொகுதியில் போட்டியிட இருவா் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

