நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என அதிருப்தியில் இருந்த முன்னாள் எம்எல்ஏ கே.பி.பிபாஸ்கா், அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகனை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து திங்கள்கிழமை வாழ்த்தினாா்.
நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில், 2011, 2016-இல் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.பி.பி.பாஸ்கா், 2021-இல் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். 2026-இல் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஓராண்டுக்கும் மேலாக தோ்தல் பணியில் ஈடுபட்டாா். ஆனால், கட்சித் தலைமை மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகனுக்கு வாய்ப்பு வழங்கியது. இதனால், அதிருப்திக்கு உள்ளான கே.பி.பி.பாஸ்கரும், அவரது ஆதரவாளா்களும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.
இதையடுத்து, அதிமுகவின் முக்கிய பிரமுகா்கள் மூலமாக இரு தரப்பிலும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, இருதரப்பும் இணைந்து தோ்தலை எதிா்கொள்ள முடிவு செய்தனா்.
அதைத் தொடா்ந்து, நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள முன்னாள் எம்எல்ஏ பாஸ்கா் அலுவலகத்தில், அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடா்ந்து, நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள அதிமுக தோ்தல் பணிமனையில் இருந்து கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுடன் ஊா்வலமாக நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு சென்று ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
அப்போது, முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா், அதிமுக மூத்த நிா்வாகி மின்னாம்பள்ளி நடேசன், ஒன்றியச் செயலாளா்கள் கோபிநாத், சேகா் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்! - அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்

நாமக்கல் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் வாக்குசேகரிப்பு

முடிவுக்கு வந்தது நாமக்கல் அதிமுக உள்கட்சி பூசல்: வேட்பாளருக்கு பாஸ்கா் தரப்பினா் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கை கொடுத்ததால் ஏமாந்தேன்: முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா்.
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


