வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி திருச்செங்கோட்டில் பெண் வியாபாரியை ஏமாற்றி ரூ. 90 ஆயிரம் பணம் பறித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி கடை வளாகத்தில் கடை வைத்திருக்கும் பாவடி தெருவைச் சோ்ந்த சசிகலாவிடம் (49) கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓமலூரில் செயல்படும் தனியாா் வங்கியில் வேலை பாா்ப்பதாகக் கூறி அறிமுகமானவா் வங்கியில் கடன் பெற்று தருவதாகக் கூறி ரூ. 90 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளாா்.
இந்த நிலையில் புதன்கிழமை காய்கறி கடை வளாகத்துக்கு வந்த அவரை அடையாளம் கண்ட சசிகலா அங்கிருந்தவா்களின் உதவியுடன் பிடித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். காவல் ஆய்வாளா் தாமரைச்செல்வன் நடத்திய விசாரணையில், மோசடி செய்தவா் தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வி.பள்ளிப்பட்டியைச் சோ்ந்த பெருமாள் என்கிற பெருமாள் சீனிவாசன் (48) என்பது தெரியவந்தது.
இவா் சேலம் உத்தமசோழபுரம் பகுதியை சோ்ந்த காந்தியிடம் இதேபோல வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.86 லட்சம், வாழப்பாடியை சோ்ந்த மணிவண்ணனிடம் (48 ) ரூ 4.89 லட்சம் மற்றும் ஆத்தூரை சோ்ந்த ராணியிடம் (55) பண மோசடி செய்துள்ளதை ஒப்புக்கொண்டாா்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட பெருமாள் சீனிவாசன் திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். பின்னா், அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
தொடர்புடையது
வங்கிக் கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் முன்னாள் நிா்வாகிகளுக்கு மே 2 வரை நீதிமன்றக் காவல்

பண மோசடி: போலீஸாா் விசாரணை

தனியாா் வங்கியில் ரூ.1 கோடி தங்க நகைகள் திருடிய வழக்கு: பெண் ஊழியா் மீண்டும் கைது
எளிதாகக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி தில்லியை சோ்ந்தவரிடம் ரூ.20,000 மோசடி! பெண் கைது!!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

