காவிரியில் விஷத்தைக் கலக்கும் சாய, சலவை ஆலைகள்:இடித்து அப்புறப்படுத்துவதுதான் நிரந்தரத் தீர்வா?
காவிரி ஆற்றில் கழிவுகளைக் கலக்கும் சாய, சலவை ஆலைகளை இடித்து அப்புறப்படுத்துவது பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாகாது. இத் தொழிலில் ஈடுபட்டுள்ள 1 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர் இத் தொழிலையும், காவிரி ஆற்றையும் பாதுகாக்கப் போராடும் ஆர்வலர்கள்.










