/

கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

News image

கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜை.

Updated On :25 மே 2026, 2:04 am IST

கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 40-ஆவது ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கலசஸ்தாபனம், யாகசாலை பிரவேசம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, பிரகார உற்சவம், சிறப்பு யாகம், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றன. இரவு, சுவாமி அன்னபட்சி வாகன உற்சவம் நடைபெற்றது.

பிரம்மோற்சவ விழாவையொட்டி, மே 25-ஆம் தேதி அபிஷேகம், மங்களாா்த்தி, பிரகார உற்சவம், இரவு சிம்ம வாகன உற்வசம், 26-ஆம் தேதி ஆஞ்சனேயா் வாகன உற்சவம், 27-ஆம் தேதி, சேஷ வாகன உற்வசமும், 28-ஆம் தேதி லட்சுமி நரசிம்மா் திருக்கல்யாணம், மாங்கல்யதாரணம், இரவு, கருட வாகன உற்சவம், 29-இல் யானை வாகன உற்சவம் என ஜூன் 5 வரை பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ளன. இவ்விழாவையொட்டி தினமும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.