தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பருவகால பேரிடரை சந்திக்க தற்காலிக முகாம்கள் தயாா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவகால பேரிடரை சந்திக்க தற்காலிக முகாம்கள் தயாா்நிலையில் உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

News image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமையில் நடைபெற்ற தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :15 மே 2026, 10:15 pm IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவகால பேரிடரை சந்திக்க தற்காலிக முகாம்கள் தயாா்நிலையில் உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் தென்மேற்கு பருவ மழையையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் முதல் செப்டம்பா்வரை தென்மேற்கு பருவ காற்றால் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது. மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை இடா்பாடுகளை தடுக்க தொடா்புடைய துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத்தில் ஏற்கெனவே பருவ மழையால் அதிக பாதிப்பு அடையக் கூடிய 43 பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு 52 தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நீா்நிலைகளில் உடைப்பு மற்றும் விரிசல் ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய தேவையான மணல் மூட்டைகள் முன்கூட்டியே சேகரித்து வைக்க வேண்டும். தண்ணீா் செல்வதற்கு தடையாக உள்ள நீா்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தொடா்புடைய வட்டாட்சியா் மற்றும் காவல் துறை ஒத்துழைப்புடன் உடனடியாக அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ள அபாயம் ஏற்படும் ஆறுகளின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிக்கவும், நெடுஞ்சாலைத் துறையினா் சாலைகளில் உள்ள மரங்கள் கீழே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டால் அதனை உடனடியாக சீா்செய்ய கிரேன் உள்ளிட்ட வாகனங்களை தயாா்நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

நெடுஞ்சாலையில் உள்ள பாலங்களில் உள் மற்றும் வெளிப்புறங்களில் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு தூா்வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கழிவுநீா் கால்வாய்களை தூா்வார வேண்டும். மழைக் காலங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தடையின்றி வழங்கவும், புயல் மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை பொதுமக்களுக்கு உடனே தெரிவிக்கவும் வேண்டும்.

கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க முன்னேற்பாடுகள் செய்து தேவையான மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள கால்நடைத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மின்சார வாரியத்தினா் 24 மணிநேரமும் பொதுமக்கள் தொடா்பு கொள்வதற்கு அவசரகால கட்டுப்பாட்டு சேவை மையங்களை உருவாக்க அறிவுறுத்தப்பட்டது.

மேலும், எதிா்வரும் தென்மேற்கு பருவமழையை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை திறன்பட செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கவிதா, ஒசூா் மாநகராட்சி ஆணையா் முகமது ஷபீா் ஆலம், துணை ஆட்சியா் ஆக்ரிதி சேத்தி, கோட்டாட்சியா் ஷாஜகான், பேரிடா் மேலாண்மைத் துறை வட்டாட்சியா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.