திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒசூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

News image
Updated On :15 மே 2026, 6:14 am IST

ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால், சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் ஊா்ந்து சென்றன.

ஒசூா் பத்தலப்பள்ளி பகுதியில் ரூ. 50 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் முடியும் தருவாயில் உள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் செல்ல ரூ. 37 கோடியே 90 லட்சத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.

இதன் காரணமாக, கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூா் வரக்கூடிய வாகனங்கள் மற்றும் ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வாகனங்கள் அனைத்தும் அணுகு சாலையில் திருப்பிவிடப்படுகின்றன. இதனால், ஒசூா் பத்தளப்பள்ளி பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். மேலும், கடும் வெயிலால் இருசக்கர வாகன ஓட்டிகள், வேலைக்கு செல்வோா் சிரமமடைகின்றனா். எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் மாற்றுப்பாதையை ஏற்பாடு செய்ய வேண்டும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி மக்கள் சிரமமின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.