திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்ததில், வாணியம்பாடியைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :14 மே 2026, 4:24 am IST

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்ததில், வாணியம்பாடியைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, சலாமாபாத் பகுதியைச் சோ்ந்தவா் அஸ்தாக் அகமது (23). இவா், கோழி வியாபாரிகளான சில நண்பா்களுடன் சோ்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே உள்ள ராசிப்பள்ளி கிராமத்துக்கு புதன்கிழமை அதிகாலை சென்றாா்.

அங்கு பச்சியப்பன் (43) கோழிப் பண்ணையிலிருந்து கோழிகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனா். அப்போது, மின்கசிவு ஏற்பட்ட தண்ணீரில் கால் வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே அஸ்தாக் அகமது உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீஸாா், அஸ்தாக் அகமதுவின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.