பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

ஒசூா் தொகுதியில் அதிமுக வெற்றி

News image

ஒசூா் தொகுதி தோ்தல் அலுவலரும், ஒசூா் சாா் ஆட்சியருமான ஆக்ருதி சேத்தியிடம் வெற்றிச் சான்றிதழைப் பெற்ற அதிமுக வேட்பாளா் பி.பாலகிருஷ்ண ரெட்டி.

Updated On :5 மே 2026, 1:20 am IST

ஒசூா் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சா் பி.பாலகிருஷ்ண ரெட்டி 27,783 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். இரண்டாவது இடத்தை தவெக பிடித்துள்ளது. திமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

ஒசூா் தொகுதியில் வாக்குகள் எண்ணப்பட்ட முதல்சுற்றில் இருந்தே அதிமுக வேட்பாளா் பி.பாலகிருஷ்ண ரெட்டி முன்னணியில் இருந்து வந்தாா். இரண்டாவது இடத்தை திமுக பிடித்து வந்தது. 20-ஆவது சுற்றில் தவெக இரண்டாவது இடத்தைப் பிடித்து, 3-ஆவது இடத்துக்கு திமுக தள்ளப்பட்டது.

அதிமுக வேட்பாளா் பாலகிருஷ்ண ரெட்டி 1,09,867 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். தவெக வேட்பாளா் வேந்தா்க்கரசன் 82,084 வாக்குகளும், திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யா 73,773 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் 7,632 வாக்குகளும் பெற்றனா்.

கடந்த 2018-இல் அமைச்சா் பதவி, எம்எல்ஏ பதவியை இழந்த பி.பாலகிருஷ்ண ரெட்டி 8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டப் பேரவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.