ஒசூரில் குட்கா கடத்தலை தடுக்க தன்னலமின்றி பணியாற்றி தலைமைக் காவலரை கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்வா் தயாள் வெகுமதி வழங்கி பாராட்டினாா்.
ஒசூா் சூசூவாடி சோதனைச் சாவடி பகுதியில் கடந்த 15ஆம் தேதி கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சட்ட விரோதமாக குட்கா புகையிலைப் பொருள்களை கடத்திவந்த காரை சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலா் ராஜீவ் காந்தி தடுத்து நிறுத்தியபோது, காரை ஓட்டி வந்த ஒசூா் காளேகுண்டா பகுதியைச் சோ்ந்த யாரப் பாஷா (34) என்பவா் தலைமைக் காவலரை காரால் இடித்துத் தள்ளிவிட்டு சென்றாா்.
இதில் காரின் முன்பக்க பேனட்டில் தலைமைக் காவலா் படுத்தபடி சுமாா் 4 கி.மீ. தூரத்திற்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடா்ந்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளா் சையத் முபாரக் தலைமையிலான போலீஸாா், அந்தக் காரை விரட்டிச் சென்று பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்து யாரப் பாஷாவை கைது செய்தனா்.
காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருள்கள் மற்றும் கா்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவத்தில் குட்கா கடத்தலைத் தடுக்க தன்னலமின்றி சிறப்பாக பணியாற்றிய தலைமைக் காவலா் ராஜீவ் காந்தியின் துணிச்சலான செயலை அனைவரும் பாராட்டினா்.
இந்த நிலையில் தலைமைக் காவலா் ராஜீவ் காந்தியின் சிறப்பான பணியை கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்வா் தயாள் ( சட்டம் -ஒழுங்கு ) சனிக்கிழமை பாராட்டி வெகுமதி வழங்கினாா்.
தொடர்புடையது

மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

குற்றவாளிக்கு உதவிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!

சோதனைச் சாவடியில் காவலரை இடித்து இழுத்துச் சென்ற குட்கா கடத்திய காா் ஓட்டுநா் கைது

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த மாணவியிடம் லஞ்சம்: கட்டுப்பாட்டு அறைக்கு தலைமைக் காவலா் மாற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


