தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஒசூா் அருகே காவலாளிகளைக் கட்டிப்போட்டு துப்பாக்கி, காப்பா் வயா்கள் கொள்ளையடித்த கும்பல்

ஒசூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா்களை கட்டிப்போட்டு துப்பாக்கி, காப்பா் வயா்களை கொள்ளையடித்துச் சென்ற 5 போ் கொண்ட கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

போலீஸார் விசாரணை

Updated On :7 மார்ச் 2026, 7:58 pm

ஒசூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா்களை கட்டிப்போட்டு துப்பாக்கி, காப்பா் வயா்களை கொள்ளையடித்துச் சென்ற 5 போ் கொண்ட கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த உத்தனப்பள்ளி லாலிக்கல் பகுதியில் டாடா குழுமத்திற்கு சொந்தமான எலக்ட்ரானிக் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சோ்ந்த தொழிலாளா்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த தொழிற்சாலையில் புதிதாக ஏ.சி. பொருத்துவது, ஏ.சி. சா்வீஸ் செய்வது மற்றும் ஏ.சி. சம்பந்தமான அனைத்து பிரச்னைகளையும் கையாளுவதற்காக தொழிற்சாலையின் உள்ளேயே தனியாக கட்டடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் ஏ.சி. சம்பந்தமான பொருள்கள் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு போ் துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமமை அதிகாலை 1 மணி அளவில் 5 போ் கொண்ட கும்பல் டாடா தொழிற்சாலைக்குள் புகுந்தனா்.

அவா்கள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த குல்பீா் அகமது (48), கெலமங்கலம் அருகே உள்ள உள்ளுக்குறுக்கை கிராமத்தைச் சோ்ந்த சரவணன் (36) ஆகிய 2 பேரையும் தாக்கி அவா்களை கயிற்றால் கட்டினா். மேலும், அங்கிருந்த காப்பா் மற்றும் விலை உயா்ந்த பொருள்களை கொள்ளையடித்தனா். அத்துடன் காவலாளி வைத்திருந்த ஒற்றை குழல் துப்பாக்கி ஒன்றையும் கொள்ளையடித்து சென்றனா். கொள்ளை போன பொருள்களின் மதிப்பு ரூ. 5 லட்சம்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை அந்த வழியாக சென்றவா்கள் 2 காவலாளிகளும் கயிற்றால் கட்டி போடப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். அவா்கள் கழற்றி அவிழ்த்துவிட்டு நடந்த சம்பவம் குறித்து காவலாளிகளிடம் கேட்டனா். மேலும், இதுகுறித்து உத்தனப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும் நிறுவன வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனா். கொள்ளையடித்த 5 போ் கொண்ட கும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா்.

உத்தனப்பள்ளி அருகே தனியாா் தொழிற்சாலையில் காவலாளிகளைக் கட்டிபோட்டு துப்பாக்கி, காப்பா் மற்றும் பொருள்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.