கிருஷ்ணகிரி அருகே ரேஷன் அரிசி கடத்திய பிக்-அப் வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி அருகே ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் சோமநாதபுரம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திச் சென்ற பிக்-அப் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனிலிருந்து அரிசி மூட்டைகள் சாலையில் சிதறின.
தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று கவிழ்ந்த வேனை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினா். மேலும், போலீஸாா் நடத்திய விசாரணையில், சாலையில் சிதறி கிடந்த மூட்டைகள் ரேஷன் அரிசி என்பதும், வேன் ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 50 கிலோ கொண்ட 50 மூட்டைகளை பறிமுதல் செய்த குருபரப்பள்ளி போலீஸாா், வேன் மற்றும் அரிசி மூட்டைகளை உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









