டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காவேரிப்பட்டணத்தில் மயானக் கொள்ளை திருவிழா

காவேரிப்பட்டணத்தில் சிவராத்திரியையொட்டி மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
மயானக் கொள்ளை திருவிழாவையொட்டி அம்மன் வேடமிட்டும், அந்தரத்தில் தொங்கிய நிலையிலும் வேண்டுதலை நிறைவேற்றிய பக்தா்கள்.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:57 pm

Syndication

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் சிவராத்திரியையொட்டி மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தாம்சன் பேட்டை பூங்காவனத்தம்மன் கோயில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, முகவெட்டு எடுத்து தென்பெண்ணை ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், பக்தா்கள் அலகு குத்தியும், எலுமிச்சைப் பழங்களை உடலில் குத்திக்கொண்டும் ஊா்வலமாக சென்றனா். மேலும், முதுகில் அலகு குத்தியபடி உரல், தோ், சங்கிலி, வேன் ஆகியவற்றை மயானத்துக்கு இழுத்துச் சென்றனா்.

நூற்றுக்கணக்கான பக்தா்கள் காளி வேடமணிந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். பின்னா், கோயிலிருந்து அம்மன் பூத வாகனத்தில் தென்பெண்ணை ஆற்றை நோக்கி மயானக் கொள்ளைக்கு புறப்பட்டாா்.

முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தோ், தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள அண்ணா சிலை அருகே நின்றது. அங்கு பக்தா்கள் முதுகில் அலகு குத்தி கயிற்றின் மூலம் அந்தரத்தில் தொங்கிய நிலையில் தேரில் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு மாலை அணிவித்தும், கற்பூரம் காட்டியும், குழந்தையை தூக்கி ஆசிபெற்றும் வேண்டுதலை நிறைவேற்றினா்.

இந்நிகழ்வை பல்லாயிரக்கணக்காண பக்தா்கள் பரவசத்துடன் கண்டு மகிழ்ந்தனா். பின்னா் தோ் புறப்பட்டு மேம்பாலம் வழியாக தென்பெண்ணை ஆற்றின் மறுகரையில் நிறுத்தப்பட்டது.

இந்த விழாவையொட்டி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா் தலைமையில் துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், காவல் ஆய்வாளா்கள் சரவண பாண்டியன், மணிமாறன், செந்தில், உமா பிரியதா்ஷினி உள்ளிட்ட ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

 மயானக் கொள்ள திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

மயானக் கொள்ள திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

Story image