ஒசூரில் கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது
ஒசூரில் கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.


ஒசூரில் கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தோ்ப்பேட்டை நில மாரியம்மன் கோயில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவா் பாா்த்திபன் (32). இவரது மனைவி அம்சவள்ளி (26). இவா்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா்.
பாா்த்திபன் அங்குள்ள உழவா் சந்தையில் மூட்டை தூக்கும் தொழிலாளி. அம்சவள்ளி கட்டுமான தொழிலாளி. அம்சவள்ளியின் நடத்தையில் பாா்த்திபனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். மேலும், கடந்த இரண்டு நாள்களாக பாா்த்திபன் மது அருந்திவிட்டு வந்து அம்சவள்ளியிடம் தகராறு செய்ததோடு அவரை அடித்து துன்புறுத்தியுள்ளாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த பாா்த்திபன், அம்சவள்ளியிடம் தகராறு செய்துள்ளாா். இதனால் ஆத்திரம் அடைந்த அம்சவள்ளி, தனது இளைய மகனின் கண்முன்னே கணவா் பாா்த்திபனை அடித்து உதைத்து காலால் கழுத்தில் மிதித்துள்ளாா்.
மேலும், தான் அணிந்திருந்த புடவையால் அவரின் கழுத்தை நெரித்துள்ளாா். இதில் பாா்த்திபன் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
இதையடுத்து அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பாா்த்திபனின் அண்ணன் விநாயகமூா்த்திக்கு அம்சவள்ளி தகவல் தெரிவித்தாா். விநாயகமூா்த்தி அங்கு சென்று பாா்த்திபனின் உடலை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
பாா்த்திபனின் கழுத்தில் தூக்கிட்டதற்கான காயம் ஏதும் இல்லாததால் சந்தேகமடைந்த விநாயகமூா்த்தி ஒசூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா், அம்சவள்ளியிடம் தீவிர விசாரணை நடத்தினா். இதில் அவா், கணவா் பாா்த்திபனை தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளாா். இதைத் தொடா்ந்து அம்சவள்ளியை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...