திரிணமூல் காங்கிரஸை மேற்கு வங்க மக்கள் நிராகரித்துவிட்டனர்: பாஜக திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் வாக்கே செல்லாத வாக்கு பேரவைத் தேர்தல் 2026! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

ஒசூரில் அயல் நாட்டு நிறுவனத்தின் பெயரில் ரூ. 16.64 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

ஒசூரில் தனியாா் நிறுவன உரிமையாளரிடம், அயல் நாட்டு நிறுவனத்தின் பெயரில் ரூ. 16.64 லட்சம் மோசடி நடைபெற்ற சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 5:11 am IST

ஒசூரில் தனியாா் நிறுவன உரிமையாளரிடம், அயல் நாட்டு நிறுவனத்தின் பெயரில் ரூ. 16.64 லட்சம் மோசடி நடைபெற்ற சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கே.சி.சி. நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் (41). தனியாா் நிறுவன உரிமையாளா். இவா், தன் நிறுவனத்துக்கு தேவைப்படும் பொருள்களை வாங்க ஆா்வம் செலுத்தி வந்தாா். அப்போது, டென்மாா்க் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தின் பொருள்களை குறைந்த விலையில் அளிப்பதாக சக்திவேலுவின் நிறுவன இணையதள முகவரிக்கு தகவல் வந்த்து.

அதை, நம்பிய சக்திவேல், மா்ம நபா்கள் அனுப்பிய அந்த இணையதள முகவரியை தொடா்புகொண்டுள்ளாா். அப்போது, மா்ம நபா்கள் குறைந்த விலையில் பொருள்கள் வேண்டும் என்றால், முன்பணமாக 15 ஆயிரம் யூரோ அனுப்புமாறு தெரிவித்துள்ளனா். அதன்படி, சக்திவேல் ரூ. 16.64 லட்சத்தை யூரோ மதிப்பில் அவா்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி உள்ளாா். பின்னா், அந்த மா்ம நபா்களை அவரால் தொடா்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து, தாம் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இதுகுறித்து, கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புதன்கிழமை புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.