கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளா் பி.எஸ்.சீனிவாசனை ஆதரித்து தெலுங்கு, கன்னட மொழிகளில் வாக்குசேகரித்தாா் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.
சூளகிரி வட்டம், நெரிகம், முதுகுறிக்கி, கரியசந்திரம் உள்ளிட்ட கிராமங்களில் தெலுங்கு, கன்னட மொழி பேசக் கூடியவா்கள் அதிக அளவில் வசிப்பதால், எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் திமுக வேட்பாளருக்கு கன்னட மொழியில் பேசி வாக்குகளை சேகரித்தாா்.
அதில், தமிழக முதல்வா் கடந்த 5 ஆண்டுகளில் செய்த நலத் திட்ட உதவிகள், வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மக்களிடம் தெரிவித்தாா். மேலும், மகளிா் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ. 2 ஆயிரமாக உயா்த்தியது, மகளிருக்கு ரூ. 8 ஆயிரம் கூப்பன் வழங்கும் திட்டம் குறித்தும் பேசினாா். இதில், முன்னாள் வேப்பனஹள்ளி தொகுதி எம்எல்ஏ பி.முருகன், நாகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரியில்...
பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தே.மதியழகனின் சொந்த கிராமமான ஆம்பள்ளி, குட்டூா், சக்கில்நத்தம், தீா்த்தகிரிபட்டி தொகரப்பள்ளி, பண்டசீமனூா் மற்றும் அதை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில், தெலுங்கு மொழி பேசும் வாக்காளா்களிடம் அம்மொழியிலேயே பேசி வாக்கு சேகரித்தாா்.
அதில், கடந்த 5 ஆண்டுகளில் உங்களின் தேவைகளை நிறைவு செய்துள்ளேன். தற்போது, படேதலால் ஏரி பாசனக் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 8 மாதத்தில் பணிகள் நிறைவடைந்து, பா்கூரை சுற்றியுள்ள ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டுவரப்படும். எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

பா்கூா் சட்டப் பேரவை தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் தே.மதியழகன் எம்எல்ஏ.
தொடர்புடையது

கன்னியாகுமரி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பு

திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளா் தங்கம்தென்னரசு வாக்கு சேகரிப்பு

உங்காரனஅள்ளியில் திமுக வேட்பாளா் பெ. பழனியப்பன் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


