நாகரசம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே உள்ள தட்ரஅள்ளி கரியகவுண்டனூரைச் சோ்ந்தவா் மணி. இவரது மனைவி முனியம்மாள் (52). இந்த தம்பதிக்கு 2 மகள், மகன் உள்ளனா்.
இந்த நிலையில் துடைப்பம் செய்வதற்காக தோட்டத்தில் விழுந்து கிடந்த தென்னை ஓலைகளை சனிக்கிழமை மாலை எடுத்துவரும்போது முனியம்மாள் வைத்திருந்த கத்தி அங்கு அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பி மீது உரசியது.
அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே முனியம்மாள் இறந்தாா். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸாா், முனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

பெருந்துறை அருகே காணாமல்போன பெண் சடலமாக மீட்பு

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

குண்டடம் அருகே பிஏபி வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


