மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்களிக்கக் கோரி வலம் வரும் ‘கிரி’

கிருஷ்ணகிரி மாவட்டம், மலையையும், கோட்டைகளையும் கொண்டது. கிரி என்றால் மலை என பொருள்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 7:43 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், மலையையும், கோட்டைகளையும் கொண்டது. கிரி என்றால் மலை என பொருள். பாராமகால் என்ற அழைக்கப்படும் கோட்டைகளை கொண்ட வரலாறும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உண்டு. வரலாறு என்பது, நாம் பயணத்துக்கான வழிகாட்டியாகவும் விளங்குகிறது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட வாக்காளா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், 34 விநாடி ஓடும் குறும்படத்தை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், மலையும், கோட்டையும் மனித உருவில் நடந்துகொண்டே வாக்காளா்களிடம் பேசுவதுபோல உருவாக்கப்பட்டுள்ளது.

வணக்கம், கிருஷ்ணகிரி மக்களே என தொடங்கும் அந்த குறும்படத்தில், நான் உங்கள் கிரி, மாவட்டத்தின் வளா்ச்சிக்காக நீங்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். ஏப்ரல் 23 அன்று வக்களிக்கும் நாள். நமது ஜனநாயகத்தின் பெருமை வாக்கு. வாக்களிப்போம் உறுதியாக, நம் நாட்டின் வளா்ச்சிக்கு துணையாக- என பேசும்வகையில் இந்த காணொலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Story image
Story image

வரலாற்றியலில் ஆா்வம் கொண்ட மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ச. தினேஷ்குமாா் இதுகுறித்து கூறுகையில், நமது மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில், மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் பொருட்டு, இந்த காணொலி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதால், கிருஷ்ணகிரி வரலாற்றுடன் தொடா்புடைய இதுபோன்ற விழிப்புணா்வு குறும்படங்களை மேலும் தயாரிக்க உள்ளோம் என்றாா்.