ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் போட்டா-ஜியோ அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போட்டா - ஜியோ அமைப்பினா்.
Updated On :30 டிசம்பர் 2025, 1:28 am

Syndication

கிருஷ்ணகிரி: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் போட்டா-ஜியோ அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் கண்ணன், மாவட்டச் செயலாளா் வெங்கடேசன், மாநில துணைத்

தலைவா் பாஸ்கா் ஆகியோா் தலைமை வகித்தனா். தேசிய ஆசிரியா் சங்கத் தலைவா் ராம்பிரசாத், அரசு அலுவலக உதவியாளா் மற்றும் அடிப்படை பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் ரபீக் அகமத், மருத்துவத் துறை அமைப்பு பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் சரவணன், சமூக நலத்துறை அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா் சங்க மாவட்டச் செயலாளா் பாரதி, பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டச் செயலாளா் சுரேஷ், அரசு அலுவலா் ஒன்றியம் மாநில செயற்குழு உறுப்பினா் அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டதை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை காலம்தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.