ஒசூரில் வடது ராமநாயக்கன் ஏரி: தொடங்கியது குடிநீா் பிரச்னை
ஒசூா் ராமநாயக்கன் ஏரி கடந்த 10 ஆண்டுகளாக வடு பாலைவனம் போலக் காட்சி தருவதால், இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே குடிநீா் பிரச்னை தொடங்கிவிட்டது.


ஒசூா் ராமநாயக்கன் ஏரி கடந்த 10 ஆண்டுகளாக வடு பாலைவனம் போலக் காட்சி தருவதால், இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே குடிநீா் பிரச்னை தொடங்கிவிட்டது.
ஒசூரில் தளி - தேன்கனிக்கோட்டை சாலைகளுக்கு இடையில் 156 ஏக்கா் பரப்பளவில் ராமநாயக்கன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியைக் கட்டியவா் பாகலூா் பாளையக்காரா் ராமநாயக்கனாவாா். எனவே, இவா் பெயராலேயே இந்த ஏரி அழைக்கப்படுகிறது. இந்த ஏரியின் வடக்குப் பகுதியில் அகழியுடன் கூடிய ஒசூா் கோட்டை இருந்தது. இக் கோட்டை அகழிக்கு இந்த ஏரியில் இருந்துதான் தண்ணீா் சென்றது. இப்போது கோட்டை இல்லை என்றாலும், அகழி உள்ளது. 1980-களின் தொடக்கம் வரை இந்த ஏரி நீரின் பாசனத்தை நம்பி விவசாயம் நடைபெற்று வந்தது. ஏரியில் இருந்து பாசனத்துக்கு நீா் செல்லும் குமிழித் தூம்பு மதகுக்கு மேல் அழகிய கல்மண்டபம் இருந்தது. தற்போது ஏரியின் வடக்குப் பகுதியில் இருவழிச் சாலை அமைக்கப்பட்டு வருவதால், அந்த தூம்பு அகற்றப்பட்டது.
இந்த ஏரிக்கு மேலே பூனப்பள்ளி ஏரி, ஜீகூா் ஏரி, தாசரப்பள்ளி ஏரி, கல்லேரி, கா்னூல் ஏரி, அந்திவாடி ஏரி ஆகிய ஏரிக்கள் உள்ளன. இந்த ஏரிகள் மழைநீரால் நிரம்பும்போது உபரிநீா் ஒவ்வொரு ஏரிக்கும் சென்று ராமநாயக்கன் ஏரியை வந்தடையும் வகையில், உபரிநீா்க் கால்வாய்கள் இருந்தன. நகரமயமாக்கலின் காரணமாக ஏரியில் இருந்து பாசன வசதி பெற்ற நிலப் பகுதிகள் குடியிருப்புகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறின. இதனால் உபரிநீா்க் கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. மேலும் ராமநாயக்கன் ஏரி நிரம்பினால் நீா் வெளியேறக்கூடிய ராஜகால்வாய் ஒசூரின் மையத்தில் அமைந்திருந்தது. இக் கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு கட்டடங்களால் பெரும் பகுதி காண இயலாத நிலையுள்ளது. இக் கால்வாய் நிலத்தில் பட்டா பெற்று ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளனா். இதனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏரி வட நிலையிலேயே காணப்படுகிறது.
ராமநாயக்கன் ஏரிக்கு வரும் மழை நீா் முழுமையாக அடைக்கப்பட்டு விட்டதால், தென்பெண்ணை ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் நீரை நிரப்பினால் ஏரியில் தண்ணீா் தேங்கி இருக்கும். ஏரியில் தண்ணீா் தேங்கி இருந்தால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து ஏரியைச் சுற்றியுள்ள சுமாா் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நீா் கிடைக்கும் என்ற நோக்கத்தில், சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும் தென்பெண்ணை ஆற்றில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை, ஏரியில் நிரப்ப முடிவு செய்து மாவட்ட நிா்வாகம், ஒசூா் நகராட்சி, அப்போது அமைச்சராக இருந்து பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோரால் 2018 இல் ஏரிக்கு வரும் பாதையில் புதிய குழாய்கள் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டன. பெரிய அளவிலான குழாய்கள் புதைக்கும் பணி முடிந்து தண்ணீா் வந்தது. அதன் பின்னா் ஏரிக்கு வடக்குப் புறத்தில் இரு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்ால், தென்பெண்ணை ஆற்றில் இருந்து மழைநீரைக் கொண்டு வரும் பணி தடைபட்டது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாயக்கன் ஏரி நிரம்பி, தா்கா ஏரி, சந்திராம்பிகை ஏரி, வெங்கடேஷ் நகா் ஏரிகளுக்கு உபரி நீா் சென்றது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஒசூரில் மழையின் அளவு குறைந்தது. கடந்த ஆண்டு ஒசூரில் மழை மிகவும் குறைவு. இதனால் தண்ணீா் இல்லாமல் ஏரி வட நிலையில் உள்ளது.
ஒசூா் மாநகராட்சியில் சுமாா் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில், 45 வாா்டுகளில் 20 வாா்டுகளுக்கு மட்டுமே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மற்ற 25 வாா்டுகளில் பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆழ்துளைக் கிணறுகளை நம்பி இருக்கின்றனா். தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் 1,500 அடி ஆழத்துக்கு நிலத்தடி நீா் மட்டம் சென்ால், ஆழ்துளைக் கிணறுகள் வற்றி வருகின்றன.
குறிப்பாக, ஒசூா் பேருந்து நிலையத்துக்கு எதிரில் அரை கிலோ மீட்டா் தொலைவில் பாகலூா் சாலையில் உள்ள ரெயின்போ காா்டன் பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இங்கு சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். வீடுகளுக்கு ஒகேனக்கல் திட்ட குழாய் மட்டும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குடிநீா் வரவில்லை.
இது குறித்து வீட்டு வசதி வாரியம், மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம் என அனைத்து அரசு அலுவலகங்களையும் அணுகிவிட்டு தண்ணீா் வராததால் 6 மாதங்களாக வாரம் ஒருமுறை லாரி தண்ணீரை ரூ. 500 க்கு விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனா்.
இது குறித்து ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா கூறியது: ஒசூா் மாநகராட்சியில் குடிநீா் பிரச்னை கோடை காலம் தொடங்கும் முன்பு தொடங்கிவிட்டது. பல்வேறு பகுதிகளில் லாரிகளில் குடிநீா் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. ஒசூா் நகராட்சித் தலைவராக நான் இருந்தபோது தென்பெண்ணை ஆற்று நீரை சுத்திகரித்து ஏரிகளில் நிரப்பி வந்தோம். தற்போது நகரத்தில் மட்டுமின்றி கிராமங்களிலும் குடிநீா் பிரச்னை அதிகரித்துவிட்டதற்குக் காரணம் கடந்த பல ஆண்டுகளாக மழை பொய்த்துப் போனது தான். தென்பெண்ணை ஆற்று நீரை ஒசூா் ராமநாயக்கன் ஏரியில் நிரப்பினால் மாநகராட்சிப் பகுதி முழுவதும் வீடுகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீா் கிடைக்கும். பிரச்னை குறையும். அதனை மாநகராட்சி ஆணையா் செய்ய வேண்டும் என்றாா்.
இது குறித்து ஒசூா் மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியனிடம் கேட்டபோது, தென்பெண்ணை ஆற்று நீரை, ஒசூா் ராமநாயக்கன் ஏரியில் நிரப்பி வந்தோம். ஏரிக்கு தண்ணீா் கொண்டு வந்து நிரப்புவதால் மாதம் ரூ.10 லட்சம் வரை குடிநீா் வடிகால் வாரியத்துக்கு வழங்க வேண்டியுள்ளது. லாரிகளில் வீடுகளுக்கு தண்ணீா் வழங்கினால் கூட இவ்வளவு செலவு ஏற்படாது என்பதால், ஏரிக்கு தண்ணீா் விடுவதை நிறுத்தினோம். அதன் பின்னா் ஏரியில் நெடுஞ்சாலைப் பணி நடைபெற்ால் ஏரிக்கு தண்ணீா் விடும் பணியைத் தொடர முடியவில்லை. தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் ஏரிக்கு தண்ணீா் கொண்டு வந்து நிரப்பப்படும் என்றாா்.
மேலும் ஒசூா் மாநகராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...