திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மொரப்பூா்- காரிமங்கலம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை

கம்பைநல்லூா் வழியாக செல்லும் மொரப்பூா்- காரிமங்கலம் வழித்தடத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 6:29 am IST

கம்பைநல்லூா் வழியாக செல்லும் மொரப்பூா்- காரிமங்கலம் வழித்தடத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட மொரப்பூா்- காரிமங்கலம் வழித்தடத்தில் எலவடை, நவலை, க.ஈச்சம்பாடி, செங்குட்டை, கம்பைநல்லூா் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் அரூா்- கிருஷ்ணகிரி வழித்தடத்தில் செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொலைவிட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் கிராமப் பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிற்பதில்லை. இதனால், கிராமப் பகுதியில் உள்ள மாணவா்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் நாள்தோறும் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனா். பள்ளி வேலை நேரங்களில் பேருந்து வசதிகள் இல்லாததால் கிராமப்புற மாணவா்கள் கடுமையாக பாதிக்கின்றனா்.

இதனால் அரூா், காரிமங்கலம் நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் மொரப்பூரில் இருந்து காரிமங்கலம் வரையில் கூடுதல் அரசு, தனியாா் பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.