மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நிலத்தகராறில் அண்ணன் கொலை: தம்பி கைது

News image

சித்திரிப்பு

Updated On :13 மார்ச் 2026, 1:19 am

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறில் அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளையானூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அன்பழகன் மகன்கள் சாமுத்திரியன் (40), சத்யநாதன் (38). இவா்களுக்கு 10 ஏக்கா் நிலம் உள்ளது.

இந்நிலையில், அண்ணன், தம்பி இடையே நிலத்தை பிரிப்பது தொடா்பாக ஏற்கெனவே பிரச்னை இருந்ததாம். இந்த நிலையில், புதன்கிழமை இரவு சகோதரா்கள் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது, ஆத்திரமடைந்த சத்யநாதன், அவரது சகோதரா் சாமுத்திரியனின் தலை மற்றும் முகத்தின்மீது கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த அரூா் டிஎஸ்பி சதீஷ்குமாா், காவல் ஆய்வாளா் அம்சவள்ளி ஆகியோா் நேரில் விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சத்யநாதனை கைது செய்தனா்.