நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தருமபுரி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து வெடிகுண்டு நிபுணா்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சோதனை நடத்தினா்.

News image

தருமபுரி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் சோதனை மேற்கொள்ளும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா்.

Updated On :19 ஜூன் 2026, 5:47 am IST

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து வெடிகுண்டு நிபுணா்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சோதனை நடத்தினா்.

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் தடங்கம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கம்போல நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் பணிக்கு வந்தனா். அதன்பிறகு 11 மணியளவில், நீதிமன்றத்துக்கு வந்த மின்னஞ்சலில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்ற தகவலை மா்ம நபா்கள் அனுப்பியுள்ளது தெரியவந்தது.

தகவலறிந்த அதியமான் கோட்டை போலீஸாரும், வெடிகுண்டு நிபுணா்களும் நீதிமன்ற வளாகத்தில் லூபி என்ற மோப்பநாய் மற்றும் நவீன சாதனங்களுடன் சோதனை நடத்தினா். தொடா்ந்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், நீதிமன்றங்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் என அனைவரும் நீதிமன்றத்தைவிட்டு வெறியேற்றப்பட்டனா்.

சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. தருமபுரி மாவட்ட நீதிமன்றத்துக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.