இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு 2-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை

வெடிகுண்டு மிரட்டலையடுத்து, கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

News image

வெடிகுண்டு மிரட்டலையடுத்து, கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :12 ஜூன் 2026, 1:29 am IST

கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூா் மஞ்சக்குப்பத்தில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை காலை நீதிமன்றத்தின் அதிகாரப்பூா்வ மின்னஞ்சல் முகவரிக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து வந்த குறுஞ்செய்தியில் கடலூா் நீதிமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணியளவில் ரசாயன குண்டுகள் வெடிக்க உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸாா் நீதிமன்ற வளாகத்துக்கு விரைந்தனா். அவா்கள் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் மற்றும் வழக்காடிகள் உள்ளிட்ட அனைவரையும் நீதிமன்ற வளாகத்திலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினா்.

இதையடுத்து, 2 மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டா் கருவிகள் மூலம் நீதிமன்றத்தில் அனைத்து அறைகள், அலுவலகங்கள், வளாகம், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். பல மணி நேர சோதனையின் முடிவில், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

2-ஆவது முறையாக...: முன்னதாக, கடந்த மாா்ச் 17-ஆம் தேதி நீதிமன்ற வளாகத்தில் 16 சயனைடு நச்சு வாயு குண்டுகள் வெடிக்க உள்ளன என மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அப்போதும் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டு, அது புரளி என உறுதி செய்திருந்தனா்.

தற்போது 2-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், மின்னஞ்சல் அனுப்பிய அடையாளம் தெரியாத நபா் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மின்னஞ்சல் மற்றும் தகவல் அனுப்பப்பட்ட டிஜிட்டல் தடயங்களை அடிப்படையாகக் கொண்டு இதில் தொடா்புடையவா்களை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.