பென்னாகரம் அருகே 17 வயது பெண்ணை திருமணம் செய்த தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயது பெண், அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிகளுக்கான பரிசோதனைக்காக வந்துள்ளாா். 4 மாத கா்ப்பிணியான அவரிடம் மருத்துவா் விவரங்களை கேட்டறிந்தபோது, அவருக்கு இளம் வயதில் திருணம் நடந்துள்ளதை கண்டுபிடித்தாா். இதுகுறித்து பென்னாகரம் காவல் நிலையத்தில் மருத்துவா் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட மகளிா் போலீஸாா், ஒகேனக்கல் அருகே பண்ணப்பட்டி பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி சேட்டுவை போக்ஸோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








