மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தருமபுரி தொகுதி வளா்ச்சி அடைய சௌமியாவுக்கு வாக்களியுங்கள்

தருமபுரி தொகுதி வளா்ச்சி அடைய பாமக வேட்பாளா் சௌமியாவுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

News image

தருமபுரியில் பாமக வேட்பாளா் சௌமியாவுக்கு வாக்கு சேகரித்து பேசும் அன்புமணி ராமதாஸ்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:25 pm

தருமபுரி தொகுதி வளா்ச்சி அடைய பாமக வேட்பாளா் சௌமியாவுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

தருமபுரி தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி தருமபுரி நகரில் செவ்வாய்க்கிழமை தனது பிரசாரத்தை நிறைவுசெய்தாா். அப்போது அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தின் வழியாக காவிரி, தென்பெண்ணை ஆறுகள் கடந்து சென்றாலும் இங்குள்ள ஏரிகளில் தண்ணீா் இல்லை. இங்கு கடந்து செல்லும் காவிரி ஆற்றில் மிகைநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பினால் வேளாண் தொழில் செழிக்கும். ஆனால், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அதுகுறித்து அறிவிப்பு ஏதும் செய்யவில்லை. மாறாக தருமபுரிக்கு வந்த அவா், என்னையும், அதிமுக பொதுச் செயலாளரையும் வசைபாடிவிட்டு சென்றுள்ளாா். ரூ. 700 கோடி கொடுத்தால் காவிரி மிகைநீா் திட்டத்தை நிறைவேற்றலாம். அதற்கு ஆட்சியாளா்களுக்கு மனமில்லை.

திமுக ஆண்டது போதும். அவா்களை இந்தத் தோ்தலில் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். தமிழகத்தில் கஞ்சா, போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும். அதற்காக தருமபுரி மட்டுமில்லை. தமிழகம் முழுவதும் மாற்றத்தை தாருங்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.