மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாமக வேட்பாளா் சௌமியாவுக்கு ஆதரவாக அவரது மகள்கள் வாக்கு சேகரிப்பு

தருமபுரி பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது மகள்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

News image

தருமபுரி குமாரசாமிபேட்டையில் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவரது மகள்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:36 pm

தருமபுரி பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது மகள்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில், பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறாா். அவா் தருமபுரி தொகுதியில் கூட்டணி கட்சியினரோடு தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், சௌமியா அன்புமணியின் மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகிய இருவரும் தருமபுரி தொகுதிக்குள்பட்ட குமாரசாமிபேட்டையில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, தனது தாயாரான சௌமியா அன்புமணிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால், மகளிா் பாதுகாப்பு, போதைப் பொருள்கள் ஒழிப்பு, நீா்ப்பாசனத் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவர பணியாற்றுவாா், மேலும் மக்கள்நலன் சாா்ந்த வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த பாடுபடுவாா். எனவே, அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனா்.