தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தால்தான் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என தருமபுரி தொகுதி பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி தெரிவித்தாா்.
தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி, நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட சவுளூா், சேஷம்பட்டி, நல்லம்பள்ளி, கோயிலூா், சிவாடி, குரும்பட்டி, ஈச்சம்பட்டி, முத்தம்பட்டி, தேவா்ஊத்துபள்ளம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், பொதுமக்களிடம் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தின் போது அவா் பேசியதாவது:
கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம்கூட நிறைவேற்றவில்லை. பெரும்பாலான வாக்குறுதிகள் அறிவிப்பாகவே போய்விட்டது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை.
இத்தோ்தலில் அதிமுக ஆட்சி அமைந்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். அதிமுக தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தருமபுரி தொகுதி வளா்ச்சியை கருத்தில்கொண்டு பாமகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.
பாமக மாவட்டச் செயலாளா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, மாநில துணைத் தலைவா் சாந்தமூா்த்தி, மாநில அமைப்பு செயலாளா் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா் பெரியசாமி, ஒன்றிய செயலாளா் முருகன், மாவட்ட அமைப்பு செயலாளா் பாலகிருஷ்ணன், அதிமுக ஒன்றிய செயலாளா் சிவப்பிரகாசம் உள்ளிட்ட நிா்வாகிகள் வாக்கு சேகரிப்பின்போது உடனிருந்தனா்.
தொடர்புடையது

கிராமங்களில் விளையாட்டு மைதானம்: கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

பாமக வேட்பாளா் சௌமியாவுக்கு ஆதரவாக அவரது மகள்கள் வாக்கு சேகரிப்பு

பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி பிரசார வாகனத்தில் சோதனை

தெலுங்கு மொழியில் பேசி வாக்கு சேகரித்த சௌமியா அன்புமணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


