திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அனைத்து நீா்ப்பாசனத் திட்டங்களையும் செயல்படுத்த மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் வேண்டுகோள் விடுத்தாா்.
பாலக்கோடு தொகுதிக்கு உள்பட்ட கெரகோடஅள்ளி, அடிலம், நாகனம்பட்டி, கோயிலூா் ஆகிய ஊராட்சிகளில் கிராமம், கிராமமாகச் சென்று புதன்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் பேசியதாவது:
பாலக்கோடு தொகுதியில் எண்ணேகொல்புதூா்- தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை கடந்த திமுக அரசு அமல்படுத்தவில்லை. இதேபோல, பல்வேறு நீா்ப்பாசனத் திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டன. அதிமுக அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு முடக்கியது.
விவசாயிகள் நலனில் திமுக அரசுக்கு அக்கறையில்லை. இதனால் தோ்தலில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் நிறுத்தப்பட்ட நீா்ப்பாசனத் திட்டங்கள் மட்டுமில்லாது அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் அதிமுக அரசு விரைந்து நிறைவேற்றும். அதேபோல தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் அதிமுக அரசு செயல்படுத்தும். பாலக்கோடு தொகுதி தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணிக்க அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
வாக்கு சேகரிப்பின்போது பாமக, அமமுக, பாஜக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குன்னம் தொகுதியை தக்கவைத்தாா் அமைச்சா் சா.சி. சிவசங்கா்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை தடுத்து திமுக துரோகம் இழைத்துவிட்டது! - எடப்பாடி கே.பழனிசாமி

பாலக்கோட்டில் வேளாண் கல்லூரி: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



