லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மகளிா் மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை பெற அதிமுகவுக்கு வாக்களியுங்கள்

மகளிா் மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை பெற அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பிரசாரம் செய்தாா்.

News image

பாலக்கோடு தொகுதிக்குள்பட்ட சூடானூரில் பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:39 pm

மகளிா் மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை பெற அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பிரசாரம் செய்தாா்.

பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் சூடானூா், காடுசெட்டிப்பட்டி, கும்மனூா், கூலிகானூா், பாலப்பனஅள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளாா். அதேபோல, குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒருமுறை ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளாா். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.