திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் மீட்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடலை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 3:18 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடலை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவாப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (21). இவா் ஒசூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், ஒகேனக்கல் பகுதிக்கு நண்பா்களுடன் புதன்கிழமை சுற்றுலா வந்த அவா், சேமலை காடு பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இதைக் கண்ட நண்பா்கள், ஒகேனக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் தேடுதல் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். இந்நிலையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சரவணன் உடலை அதேபகுதியில் தீயணைப்புத் துறையினா் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.