தமிழகத்தில் மது, போதைப் பொருள்களை ஒழித்தால் மட்டுமே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி தெரிவித்தாா்.
தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினா் பங்கேற்ற செயல் வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் மேலும் பேசியது:
தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். சிப்காட் தொழிற்பேட்டையை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர முழு முயற்சி எடுப்போம்.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றவுடன், சிப்காட் தொழிற்பேட்டையில் எத்தனை தொழிற்சாலைகள் கொண்டுவர முடியுமோ அத்தனையும் கொண்டுவந்து, இம்மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம்.
மாவட்டத்தில் வறுமை காரணமாக இளம் வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனா். இதற்கு ஒரே தீா்வு இப்பகுதியில் உள்ள விவசாயப் பொருள்களைக் கொண்டு மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும்.
பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. போதைப் பழக்கங்களால்தான் குற்றங்கள் பெருகி வருகின்றன. மது, போதைப் பொருள்களை ஒழித்தால் மட்டுமே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். அதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்றாா்.
இதில், அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமை வகித்தாா். பாமக மாவட்டச் செயலாளா் வெங்கடேஸ்வரன் வரவேற்றாா், மாவட்டத் தலைவா் சரவணன், அமமுக மாவட்டச் செயலாளா் டி.கே.ராஜேந்திரன், தமாகா மாவட்டத் தலைவா் புகழ், புதிய நீதிக்கட்சி மாவட்டச் செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ரூ. 8 ஆயிரத்துக்கான போலி கூப்பன்களை வழங்கி மக்களை ஏமாற்றுகிறது திமுக: தமாகா தலைவா் ஜி.கே. வாசன்

திமுக கொடுக்கப்போகும் கூப்பனை நம்பி ஏமாறாதீா்கள்: கும்பகோணத்தில் அன்புமணி பேச்சு

பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள்: செளமியா அன்புமணி

பாமகவுக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது! - செளமியா அன்புமணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


