இந்நிலையில், ராசிபுரம், ஸ்ரீரங்கம், அரூர், திருப்பத்தூர், பென்னாகரம் போன்ற 5 தாலுகா தலைமை அரசு மருத்துவமனைகளும் தேசிய தரச்சான்று பெரும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவமனைகள் பட்டியிலில் தற்போது இணைந்துள்ளன. நாள்தோறும் சுமார் 900-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்லும் தாலுகா அந்தஸ்து பெற்ற ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மொத்தம் 118 படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு உட்புற நோயாளிகள் பிரிவு, வெளிப்புற நோயாளிகள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, தொற்றுநோய் பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு, ரத்த வங்கி பிரிவு போன்றவை செயல்பட்டு வருகின்றன. இங்கு கண் அறுவை சிகிச்சைக்கான வசதி, பொது அறுவை சிகிச்சை பிரிவு போன்றவை உள்ளன.