ராசிபுரத்தில் இறைச்சிக் கடைகளால் பொதுமக்கள் அவதி
ராசிபுரம், ஆக.1: ராசிபுரம் நகரில் சுகாதாரமற்ற நிலையில் ஆங்காங்கே செயல்படும் இறைச்சிக் கடைகளால் பொதுமக்களுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன் அவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியும் வருகின்றனர். நாமக்கல் ம


ராசிபுரம், ஆக.1: ராசிபுரம் நகரில் சுகாதாரமற்ற நிலையில் ஆங்காங்கே செயல்படும் இறைச்சிக் கடைகளால் பொதுமக்களுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன் அவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியும் வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகரில் தினசரி சந்தையில் நகராட்சி அனுமதியுடன் ஆட்டு இறைச்சிக் கூடம் கட்டப்பட்டு அங்கு இறைச்சிக் கடைகள் நடத்தப்படுகின்றன. இது மட்டுமன்றி பாரதிதாசன் சாலை, சிவானந்தா சாலை, கோனேரிப்பட்டி போன்ற பகுதிகளில் சலையோரம் ஆங்காங்கே இறைச்சிக் கடைகளும் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகள் சுகாதார அலுவலர்களின் அனுமதியின்றி நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், நகரில் சிவானந்தா சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் செயல்படும் மாட்டு இறைச்சிக் கடைகளால் பொதுமக்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுகிறது. சாக்கடையிலேயே கால்நடைகளின் ரத்தம், கழிவுகள் கொட்டப்படுவதால் அந்தப் பகுதி முழுவதும் சுகாதாரச் சீரழிவு ஏற்படுகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.
இரவு நேரக் கடைகள்
நகரில் முக்கிய சந்திப்புகளான புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் ஆங்காங்கே சாலையோரம் தள்ளுவண்டி இறைச்சிக் கடைகள் பெருகி வருகின்றன. மிளகுப் பொடி, மசால் பொடி தடவி எண்ணெயில் பொறிக்கும் இந்த இறைச்சிகளின் நெடி காற்றடித்து அந்த வழியே செல்வோர் கண்களில் விழுகின்றன.
பொதுமக்கள் மூக்கைப் பிடித்த படியே அந்தப் பகுதியைக் கடக்கின்றனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...