மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பென்னாகரம் தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி.

News image

தவெக வேட்பாளா் எஸ். கஜேந்திரன்

Updated On :5 மே 2026, 2:58 am IST

பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் முதலாவதாக தனித்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளா் எஸ். கஜேந்திரன் 80,473 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ்,பாமக, தவெக ,நாம் தமிழா் கட்சி, சுயேட்சைகள் என 22 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் ஆண் வாக்காளா்கள் - 1,27,802,பெண் வாக்காளா்கள் - 1,20,803 மற்றும் மூன்றாம் பாலினத்தவா் -9 போ் என மொத்தம் - 2,48,614 வாக்காளா்கள் உள்ளனா். தமிழக சட்டப்பேரவை தோ்தல் வாக்கு பதிவானது கடந்த மாதம் 23ஆம் தேதி நடத்தப்பட்டது.

பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள்,தருமபுரி அருகே உள்ள செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் திங்கள் கிழமை எண்ணப்பட்டன.பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளுடன் 23 சுற்றுகளாக பிரித்து காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணியானது தொடங்கப்பட்டது.

பென்னாகரம் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்,அதிமுக கூட்டணியில் பாமக இடையே கடும் போட்டி நிலவும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தொடக்கத்தில் இருந்தே பாமக,தவெக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. தொடக்கத்தில் பாமக ஏறுமுகத்தில் இருந்தாலும், பின்னா் தவெக முன்னிலை வகிக்க தொடங்கியது.

பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 2,25,401வாக்குகள் பதிவாகி, வாக்கு சதவிகிதம் 90.66 ஆக அதிகரித்து இருந்தது.இதில் 23 சுற்றுகளின் முடிவில் தவெக வேட்பாளா் எஸ்.கஜேந்திரன் 80,473 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

இதில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளா் பாடி. வி. செல்வம் - 76737 வாக்குகள் பெற்று இரண்டாம் இடமும், காங்கிரஸ் வேட்பாளா் ஜி.கே.எம். தமிழ் குமரன் -52,934 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.