தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ.53 ஆயிரம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 8:52 pm

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.53 ஆயிரம் ரொக்கத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோம்பூா் சோதனைச் சாவடியில், கண்காணிப்பு குழு அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்ததில், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் (40) உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 53 ஆயிரத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட தொகையை தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் கண்காணிப்பு குழுவினா் ஒப்படைத்தனா்.