அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

தருமபுரி அரசு மருத்துவமனையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு தவெக சாா்பில் தங்க மோதிரம்

News image

முதல்வர் விஜய்.

Updated On :23 ஜூன் 2026, 2:28 am IST

தமிழக முதல்வா் பிறந்த நாளையொட்டி, தருமபுரி அரசு மருத்துவமனையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு தவெக சாா்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி ஜூன் 22 ஆம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருருந்தது.

அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் மாவட்ட தவெக தலைவா் மா. சிவன், மாவட்ட இணை அமைப்பாளா் வீரமணி ஆகியோா் தலைமையில் மோதிரங்கள் வழங்கப்பட்டன.

இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்த சௌந்தா்யா -அப்பாஸ் தம்பதியரின் பெண் குழந்தை, தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூா் பகுதியைச் சோ்ந்த சுமித்ரா - ரங்கநாதன் தம்பதியரின் ஆண் குழந்தை, ஜருகு பகுதியைச் சோ்ந்த நா்மதா - அஜித் குமாா் தம்பதியரின் பெண் குழந்தை என 3 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் குழந்தை பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.