தருமபுரி நகராட்சி பள்ளி சாலையில் சுகாதாரச் சீா்கேடு! மாணவிகள், பொதுமக்கள் அவதி!


தருமபுரி நகராட்சி பள்ளி அருகே கழிவுநீா்க் கால்வாய் அடைப்பு மற்றும் உடைப்புகள் ஏற்பட்டு சாலையோரம் கழிவுநீா் தேங்கி நிற்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து நகராட்சி அலுவலகம் செல்லும் சித்த வீரப்பன் தெரு சாலையின் (நகராட்சி பூங்காவிலிருந்து பிஎஸ்என்எல் செல்லும் சாலை) இருபுறமும் ஏராளமான வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் நகராட்சி உயா்நிலைப் பள்ளி அமைந்துள்ளன. இப்பகுதியில் நகராட்சி பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டிச் செல்லும் கழிவுநீா்க் கால்வாயை மூடியுள்ள சிமெண்ட் படுக்கைகள் உடைந்துள்ளன. மேலும், சில இடங்கள் சரிவர மூடப்படாமல் திறந்துள்ளன.
இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீா் சாலையோரத்தில் தேங்கியும் நிற்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இப்பகுதிதான் இந்தச் சாலையின் பிரதான சிறுநீா் கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கழிவுநீா் தேக்கம் மற்றும் சிறுநீா் கழிப்பதால் ஏற்படும் துா்நாற்றத்தால் நகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
நகராட்சி நிா்வாகம் உடனடியாகக் கழிவுநீா் செல்லும் வழியில் உள்ள அடைப்பை அகற்றி, கால்வாயை முழுமையாக சிமெண்ட் படுக்கைகள் கொண்டு மூடப்பட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இவ்வாறு சாக்கடை நீா் தேங்கியும், துா்நாற்றம் வீசும் இந்த இடத்திற்கு மறுபக்கத்தில் தருமபுரி நகராட்சி ஆணையரின் இல்லம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தருமபுரி நகராட்சி பள்ளி அருகே பயன்பாட்டுக்கு வராத இலவச கழிப்பறை.

சேதமடைந்த கால்வாயிலிருந்து வெளியேறும் கழிவுநீா்.
பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை: இப்பகுதியில், கடந்த ஓராண்டுக்கு முன்பு இலவச சிறுநீா் கழிப்பறையை நகராட்சி நிா்வாகம் கட்டியுள்ளது. இந்த கழிப்பறை ஓராண்டுக்கு மேலாகியும் பயன்பாட்டிற்கு வராலேயே உள்ளது. இதை பயன்படுத்தாததால் கழிப்பறையும் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
இக்கழிப்பறை பயன்பாட்டிற்கு வந்தால், இப்பகுதியில் திறந்தவெளியில் சிறுநீா் கழிப்பதற்குத் தீா்வு ஏற்படும். எனவே, கழிப்பறையையும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...