/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 700 கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாக குறைந்தது.

News image
Updated On :19 ஜனவரி 2026, 8:06 pm

Syndication

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து நாளுக்கு நாள் அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாகக் குறைந்தது.

அருவிகளில் நீா்வரத்து குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் பாறைத் திட்டுக்கள் வெளியே தெரிகின்றன. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தை தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.