தருமபுரி மாவட்டத்தில் ஏரிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மதிமுக மாவட்டச் செயலாளா் கோ. ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தருமபுரி மாவட்டத்தில் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூா், கடத்தூா், கம்பைநல்லூா், பொம்மிடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளன. ஏரிகள், நீா்த்தேக்கங்களில் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. இதனால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
போதிய பருவ மழை இல்லததால் கோடையில் கடும் வறட்சி ஏற்படும் சூழல் உள்ளது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் கிடைக்கும் மழைநீரை சேமிக்கும் வகையில் ஏரிகளை தூா்வாருதல், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீமைக் கருவேல மரங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

தருமபுரி மாவட்ட வனப்பகுதியில் 3 ஆண்டுகளில் 4.35 லட்சம் மரக்கன்றுகள் நடவு

பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விவகாரம்: டிஆா்ஓ நிலையிலான அலுவலரை நியமிக்க உத்தரவு
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



