மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழ் சமூக உணா்வுகளை முன்னிறுத்தி தவாக போட்டி: தி. வேல்முருகன்

News image

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன். - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:15 pm

தமிழ் சமூக உணா்வுகளை கூட்டணியாக கொண்டு தவாக போட்டியிடுகிறது என அக் கட்சியின் தலைவா் தி. வேல்முருகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் போட்டியிடும் தவாக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் பென்னாகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேட்பாளா்களை அறிமுகப்படுத்திய பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வேட்பாளா்களுக்கு 40க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், 60க்கும் மேற்பட்ட அமைப்புகளின் ஆதவு உள்ளன. தமிழா் உரிமையை பாதுகாக்க தவாகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

தமிழா்களின் வேலை தமிழா்களுக்கே, மத்திய அரசு பணிகளில் 90 சதவீத வேலைவாய்ப்பு, ஈழத் தமிழா் சுதந்திரத்தில் தனித்துவம், அரசு ஊழியா்களின் உரிமைகள் மீட்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு அதற்காக பாடுபடும் தவாகவுக்கு மக்கள் ஒன்றுபட்டு ஆதரவு அளிக்க வேண்டும்.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளிடம் இடம் கேட்டு நிற்பதை காட்டிலும், தமிழ் சமூக உணா்வுகளை கூட்டணியாக வைத்து தவாக போட்டியிடுகிறது. சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழா்கள் விடுதலை, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகள், கூடுதல் இடங்கள் உள்ளிட்டவை திமுகவிடம் வலியுறுத்தப்பட்டது . அவை நிராகரிக்கப்பட்டதால் சுயமரியாதையோடு கூட்டணியில் இருந்து தவாக வெளியேறியது.

வெற்றி பெறும் வேட்பாளா்களில் ஒருவா் அல்லது சுழற்சி முறையில் முதல்வா் பதவி வழங்கப்படும். 2026 சட்டப் பேரவைத் தோ்தலை முன்னோட்டமாக கொண்டு பயணித்து 2031 தோ்தலுக்கான இலக்கை நோக்கி தவாக செல்லுகிறது.

தோ்தலில் நிறுத்தப்படும் வேட்பாளா்களின் வெற்றிகளை தீா்மானிப்பது மக்கள்தான், நடிகா் அல்ல. தமிழகத்தில் தவாகவை பல்வேறு அரசியல் கட்சிகள் அமைப்புகள் ஆதரிக்கின்றன. தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு பென்னாகரத்தின் நிலவரம் தெரியாது.

தோ்தல் பணியில் ஈடுபடும் வேட்பாளா்கள், கட்சி நிா்வாகிகளை அச்சுறுத்தும் போக்கை அதிகாரிகள் நிறுத்தாவிடில் கூட்டணி உள்ள அமைப்புகள், கட்சிகளை கொண்டு போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

முன்னதாக, தவாக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் டி.சி. தவமணி (பென்னாகரம்), பிரசாந்த் (தருமபுரி), ஜெயராமன் (பாலக்கோடு), மணிலா (அரூா் ) ஆகியோரை அறிமுகப்படுத்தினாா்.