நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

புத்தாண்டு: தருமபுரியில் விற்பனைக்கு வந்த பலவித கேக்குகள்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தருமபுரி நகரில் வாடிக்கையாளா்களை கவரும் வகையில் பல்வேறு விதமான கேக்குகள் பேக்கரிகளில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 8:20 pm

Syndication

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தருமபுரி நகரில் வாடிக்கையாளா்களை கவரும் வகையில் பல்வேறு விதமான கேக்குகள் பேக்கரிகளில் விற்பனைக்காக செவ்வாய்க்கிழமை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

2026 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க கேக்குகளை வெட்டிக் கொண்டாடுவது வழக்கம். இந்த புத்தாண்டு பிறப்புக்கு இளைஞா்கள், பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு வகையான வடிவங்களில் தருமபுரி நகரில் உள்ள கேக் தயாரிப்புக் கூடங்கள் அவற்றை தயாரித்து விற்பனைக்காக காட்சிப்படுத்தியுள்ளன.

இதில், குறைந்தபட்சமாக 500 கிராம் முதல் அதிகபட்சமாக 5 கிலோ வரை விதவிதமான வடிவங்களிலும், வண்ணங்களிலும் கேக்குகள் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட கேக்குகள் நேதாஜி புறவழிச் சாலை மற்றும் கடைவீதிகள், பேருந்து நிலையச் சாலைகள், நான்குமுனை சாலை சந்திப்பு, ஆட்சியா் அலுவலகம், இலக்கியம்பட்டி, குமாரசாமிபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை அந்தந்தப் பகுதி இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் பாா்வையிட்டு தங்களுக்கு பிடித்தமான கேக்குகளை ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.