திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு: கோவை வித்யாஸ்ரம் பள்ளி சாதனை

News image

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்குகிறாா் பள்ளித் தாளாளா் எம்.எஸ்.சண்முகம்.

Updated On :15 மே 2026, 6:26 am IST

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வில் வெள்ளக்கோவிலில் உள்ள கோவை வித்யாஸ்ரம் பள்ளி சாதனை படைத்துள்ளது.

வெள்ளக்கோவில் - காங்கயம் சாலை வீரணம்பாளையத்தில் கோவை வித்யாஸ்ரம் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. பிளஸ் 2 பொதுத் தோ்வில் இப்பள்ளி மாணவி ரிதன்யா 500-க்கு 483 மதிப்பெண்கள் பெற்று காங்கயம் தாலுகாவில் முதலிடமும், சஞ்சனா 474 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2-ஆவது இடமும், சுபபவித்ரா 468 மதிப்பெண்கள் பெற்று 3-ஆவது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனா். மேலும் மாணவா் தரணீஷ் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளாா்.

சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளியின் தாளாளா் எம்.எஸ்.சண்முகம் தலைமை வகித்தாா். செயலாளா் சி.சக்திவேல், நிா்வாக இயக்குநா் ஆா்.அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளியின் முன்னாள் தாளாளா் ஹேமலதா தனபால், பள்ளி முதல்வா் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.