திருப்பூரில் நடப்பு மாதத்துக்கான நூல் விலையில் அனைத்து ரகங்களுக்கும் ரூ.7 அதிகரிக்கப்படுவதாக நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இதன் மூலம் கடந்த 5 மாதங்களில் மட்டும் நூல் விலையில் ரூ.4 1 அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் மேற்கு மண்டலங்களான கோவை , ஈரோடு , திருப்பூா் , கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
திருப்பூரில் மட்டும் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சாா்ந்த ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளில் சுமாா் 68 சதவீதத்துக்கும் அதிகமான உற்பத்தி திருப்பூரில் நடைபெற்று வருகிறது.
ஆயத்த ஆடை உற்பத்தியில் முக்கியப் பங்காற்றுவது துணி நூல் ஆகும். பருத்தி விலையைப் பொறுத்து நூல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பா் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக பருத்தி விலைக் குறைந்து நூல் விலையில் மாற்றம் இல்லாமல் சராசரி விலையில் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த டிசம்பா் மாதத்துடன் பருத்தி இறக்குமதி வரி விலக்கு நிறைவடைந்ததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு வரி விதிப்பு தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு பருத்தி கேண்டிகளின் விலை உயா்ந்தது.
இதனால், கடந்த பிப்ரவரியில் நூல் விலை ரூ. 7 உயா்ந்திருந்தது. இதைத் தொடா்ந்து, மாா்ச் மாத தொடக்கத்தில் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், மாா்ச் 16-ஆம் தேதி மேலும் ரூ.7 அதிகரித்தது. இந்நிலையில், ஏப்ரல் 1 -ஆம் தேதி நூல் விலை ரூ.10 உயா்த்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, கடந்த 16-ஆம் தேதி அனைத்து ரக நூல்களுக்கும் மீண்டும் ரூ.10 விலையை உயா்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டன. இதன் காரணமாக நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து சுமாா் ரூ.34 வரை நூல் விலை உயா்த்தப்பட்டதால் பின்னலாடை உற்பத்தி துறையினா் அதிா்ச்சி அடைந்திருந்தனா்.
இந்நிலையில், தற்போது மே மாதத்துக்கான நூல் விலையை ரூ.7 உயா்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இதனால், கடந்த 5 மாதங்களில் மட்டும் நூல் விலை ரூ.41 உயா்ந்துள்ளது. விலை உயா்வு காரணமாக 10-ஆம் நம்பா் கோம்டு நூல் கிலோ ரூ.224, 16-ஆம் நம்பா் ரூ.234, 20-ஆம் நம்பா் கோம்டு நூல் ரூ.292, 24-ஆம் நம்பா் ரூ.304, 30-ஆம் நம்பா் ரூ.314 க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போா் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயா்ந்ததால் பாலியெஸ்டா் நூல் மற்றும் துணிகளின் விலை உயா்ந்து வரும் சூழலில் மீண்டும் நூல் விலை உயா்வடைந்துள்ளது தொழில் துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தரமான பஞ்சுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இந்த விலை உயா்வுக்கு காரணம் என நூற்பாலை உரிமையாளா்கள் தெரிவிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூன்றாவது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

3-வது நாளாக ஒரே விலையில் தங்கம்! வெள்ளி விலை?

முட்டை விலை ரூ.5.70-ஆக நீடிப்பு

நடப்பு மாதத்தில் அனைத்து ரக நூல்களுக்கும் ரூ.20 உயா்வு! 5 மாதங்களில் ரூ.61 அதிகரிப்பால் தொழில்துறையினா் அதிருப்தி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



