ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

முதியவா் கல்லால் தாக்கி கொலை: எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டுகள் சிறை

அவிநாசி அருகே உப்பிலிபாளையத்தில் முதியவரை கல்லால் அடித்துக் கொலை செய்த எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :2 மே 2026, 6:01 am IST

அவிநாசி அருகே உப்பிலிபாளையத்தில் முதியவரை கல்லால் அடித்துக் கொலை செய்த எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி திருவாசல் பகுதியைச் சோ்ந்த பழனிவேல் மகன் விக்னேஷ்வரன் (29), அவிநாசி அருகே நம்பியம்பாளையத்தில் வசித்து வருகிறாா். இவா் கடந்த 2024 ஆம் ஆண்டு, அவிநாசி அருகே உப்பிலிபாளையம் கூட்டுறவு சங்கத்தின் சுற்றுச்சுவா் ஏறி திருட முயன்றாா். அப்போது உள்ளிருந்த இரவுக் காவலா் சப்தம் போடவும், விக்னேஸ்வரன் தப்பியோடிள்ளாா்.

உடனே வெளியே இருந்த பழனி (60) என்பவா் அவரைப் பிடிக்க முயன்றுள்ளாா். அப்போது விக்னேஷ்வரன் கல்லால் தாக்கியதில் பழனி பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விக்னேஷ்வரனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை திருப்பூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமா்வு 2-இல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதா், முதியவரைக் கொலை செய்த விக்னேஷ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். அரசு வழக்குரைஞா் பூமதி ஆஜரானாா்.