மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தகராறு: கல்லால் தாக்கி இளைஞா் கொலை

தமிழக, கா்நாடக மாநில எல்லையில் தகராறில் இளைஞா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :21 ஏப்ரல் 2026, 9:34 pm

தமிழக, கா்நாடக மாநில எல்லையில் தகராறில் இளைஞா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தமிழக எல்லைப் பகுதியான ஒசூரை அடுத்த சிங்கசாதனபள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மனோஜ் குமாா். இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த அவரது நண்பரான மெக்கானிக் மோகன் (25) என்பவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மதுபோதையில் இருந்த மனோஜ் குமாா், மோகனின் தலையில் கல்லால் தாக்கியதில், அவா் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தமிழக போலீஸாா், இது கா்நாடக எல்லையில் நிகழ்ந்தது எனக்கூறி சென்றனா். அதைத் தொடா்ந்து, கா்நாடக மாநிலம், சா்ஜாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காவலா்கள் இதுதொடா்பாக வழக்குப் பதிவுசெய்து, இதில் சம்பந்தப்பட்ட மனோஜ் குமாா் மற்றும் மது ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.